Friday 10 November 2017

வெள்ளப் பிரச்சினை மக்களை சார்ந்தது; அரசியல் ஆதாயம் தேட வேண்டியதில்லை- துன் மகாதீர்


ஜோர்ஜ்டவுன் -
வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களில் எல்லாம் அரசியல் ஆதாயம் தேடி கொள்வது தவறான தேடல் என முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட் சாடினார்.

பினாங்கில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பேரிடர் மக்கள் பிரச்சினையாகும். எத்தகைய கட்சியினராக இருந்தாலும் அதற்கு உரிய தீர்வு காண வேண்டும்.
இந்த வெள்ளப் பேரிடர் மக்களின் பிரச்சினை. இதில் எந்த கட்சி, எந்த அரசாங்கம் என்பதை ஆராய வேண்டியதில்லை.  இது மத்திய, மாநில அரசாங்கங்களை சார்ந்தது ஆகும்.

தங்களுக்கு வேண்டிய அரசாங்கம் எது என்பதை சுதந்திரமாக தேர்ந்தெடுக்கும் முடிவு மக்களுடையது. முடிவு செய்வது மக்கள் கையில் உள்ளது. ஆதலால் மக்களின் பிரச்சினையில் அரசியல் கலக்க வேண்டிய அவசியமில்லை என பினாங்கு வெள்ளப் பேரிடரில் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் துன் மகாதீர் இவ்வாறு கூறினார்.

No comments:

Post a Comment