Friday 17 November 2017

சேவையாற்றும் தலைவர்கள் மக்களிடம் அதிகாரத்தை திணிக்க வேண்டாம்- டத்தோஶ்ரீ ஸம்ரி காட்டம்

புனிதா சுகுமாறன்

ஈப்போ-
அதிகாரத்தை பயன்படுத்தி வாக்காளர்களை அணுகுவதை விட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அடையாளம் கண்டு அவற்றுக்கு தீர்வுக்காணும் 'அன்பான தலைவர்களாக' தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளுங்கள்  என பேராக் மாநில மந்திரி டத்தோ டாக்டர்  ஸ்ம்ரி அப்துல் காதீர் தலைவர்களிடம் வலியுறுத்தினார்.

மலேசியாவை பொறுத்தவரை அதிகமான இந்திய வாக்காளர்கள் உள்ள ஓர் இடம் என்றால் அது புந்தோங் சட்டமன்றத் தொகுதியாகும்.  இந்த தொகுதியில்  மக்கள் சேவையாற்ற களமிறங்கும் தலைவர்கள் மக்கள் நலனில் அக்கறை உள்ளவராக இருக்க வேண்டுமே தவிர தங்களது அதிகாரத்தை மக்களிடம் திணிப்பவர்களாக இருக்கக்கூடாது.

வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் புந்தோங் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் யாராக இருந்தாலும் மக்களை  அன்பாக அணுகுங்கள்.
கடந்த பொதுத் தேர்தலின்போது புந்தோங் சட்டமன்றத் தொகுதியில் மஇகா போட்டியிட்டது. ஆயினும் அத்தேர்தலில் மஇகா வேட்பாளர்  தோல்வியடைந்ததால் இத்தொகுதி எதிர்க்கட்சிவசமானது.

வரும் பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி இத்தொகுதியை கைப்பற்ற இலக்கு கொண்டுள்ள நிலையில் இங்கு களமிறங்கி சேவையாற்றி வருகின்ற வேட்பாளர் கட்சியின் பிரதிநிதியாக மக்கள் மனதில் இடம்பிடிப்பது மிகவும் அவசியம்.

அனைவரும் ஒன்றிணைந்து அத்தொகுதியில் சேவையாற்றினால்தான் புந்தோங் தொகுதியை தேசிய முன்னனியின் கைப்பற்ற முடியும் என நேற்று புந்தோங்கில் நடைபெற்ற பேராக் மாநில மஇகா தீபாவளி உபசரிப்பில் டத்தோஶ்ரீ ஸம்ரி இவ்வாறு கூறினார்.

No comments:

Post a Comment