Wednesday 22 November 2017

'தொகுதி தேமு தலைவர் பதவியை விட்டு கொடுத்ததில் தவறேதும் இல்லை'- இளங்கோ

ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
சுங்கை சிப்புட் தேசிய முன்னணி தலைவர் பதவி என்பது நமது கைநழுவி சென்றுவிடவில்லை. மாறாக தோல்வி அடைந்த நம்மிடம் இருப்பதை விட வெற்றியடைந்த அம்னோவிடம் தற்போது இருப்பதில் தவறேதும் இல்லை என சுங்கை சிப்புட் தொகுதி மஇகா தலைவர் இளங்கோவன் முத்து தெரிவித்தார்.

கடந்த இரு தவணைகளாக  இங்கு போட்டியிட்டு தோல்வியை தழுவிய தேசிய முன்னணி வேட்பாளர்களிடம்  (மஇகா பிரதிநிதிகள்) தொகுதி தேமு தலைவர் பதவி வகிப்பதை விட லிந்தாங் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அம்னோ பிரதிநிதி இப்பதவி வகிப்பது தவறொன்றும் ஆகாது.

ஓர் அமைச்சர், ஒரு துணை அமைச்சர் ஆகியோரை தோற்கடிக்கச் செய்துவிட்டு தொகுதி தேமு தலைவர் பதவி குறித்து விமர்சனங்களையும் குறைகூறல்களையும் எழுப்புவது நியாயமாகாது.

தற்போது அம்னோவிடம் இருக்கும் இப்பதவியை மீண்டும் மஇகா கைப்பற்றுவது பெரிய விவகாரமல்ல. அதற்கு வரும் பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என 'பாரதம்' மின்னியல் ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் இளங்கோ தெரிவித்தார்.

அவருடனான சிறப்பு நேர்காணல் 'நாளை' இடம்பெறும்.

No comments:

Post a Comment