Thursday 9 November 2017

'அரசியலுக்கு அப்பாற்பட்டது மக்களின் பிரச்சினை' - வெ.1 லட்சம் நிதியுதவி

ஈப்போ-
வெள்ளப் பேரிடரினால் பாதிக்கப்பட்ட இடங்களை தூய்மைப்படுத்துவதற்கான உபகரணப் பொருட்களை வாங்குவதற்கு ஏதுவாக பேராக் மாநில அரசாங்கம் 1 லட்சம் வெள்ளியை வழங்குவதாக மாநில மந்திரி பெசார் டத்தோஶ்ரீ ஸம்ரி அப்துல் காதீர் தெரிவித்தார்.

இந்த உபகரணப் பொருட்கள் யாவும் பினாங்கு மாநிலத்திற்கு விரைந்து அனுப்பப்படும்.

இந்த நடவடிக்கையை ஒருங்கிணைப்பதற்கு ஏதுவாக கிராமப்புற வளர்ச்சி, விவசாயம், தோட்டம், தகவல், மனித மூலதன மேம்பாட்டுக் குழுத் தலைவர் சாரனி முகமட், மாநில செயலாளர் அப்துல் புவாட் மாட் நயான், மகளிர், குடும்ப, சமூக மேம்பாடு, வீடமைப்பு, ஊராட்சி குழுத் தலைவர் ருஸ்னா காசிம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதனை ஓர் அரசியல் சர்ச்சையாக உருவாக்க வேண்டாம். ஏனெனில் இது மனிதநேயத்தை சார்ந்ததாகும்.

பினாங்கு நமது அண்டை மாநிலமாகும். அங்குள்ள மக்களின் பிரச்சினை அரசியலுக்கு அப்பாற்பட்டது ஆகும் என இன்று நடைபெற்ற ஆட்சிக்குழு உறுப்பினர் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் டத்தோஶ்ரீ ஸம்ரி இவ்வாறு கூறினார்.

No comments:

Post a Comment