Thursday 2 November 2017

ஹோட்டல் உரிமையாளரானார் சூரி; திறந்து வைத்தார் சிவகார்த்திகேயன்




சென்னை-
பிரபல காமெடி நடிகர் சூரியின் ஹோட்டல் ஒன்றை நடிகர் சிவகார்த்திகேயன் திறந்து வைத்தார். சூரியின் ஹோட்டலை திறந்து வைப்பதற்காக ராஜஸ்தான் மாநிலத்தில் ‘வேலைக்காரன்’ படப்பிடிப்பில் இருந்து மிக அவசரமாக வந்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.
நடிகர் சிவகார்த்திகேயனும் சூரியும் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களில் நடித்தனர். இருவரும் நல்ல நண்பர்களாகி விட்டனர். பரோட்டா காமெடியால் பிரபலமான சூரி அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து பீடுநடைபோடுகிறார். 

தான் சம்பாதிக்கும் பணத்தில் தன் உறவினரின் குழந்தைகள் பல பேரை படிக்க வைத்து வருகிறாராம். அதோடு சூரியின் குடும்பத்தார் அனைவரும் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வருகிறார்கள். இப்போது அவர்களுக்காக  ஒரு ஹோட்டலை தொடங்கியுள்ளார் நடிகர் சூரி.
இந்த ஹோட்டலின் திறப்பு விழாவில் தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷும் இதில் கலந்து கொண்டார்.
 

No comments:

Post a Comment