Saturday 11 November 2017

விரைவில் நாடு முழுவதும் அதிரவைக்கவுள்ளது “வில்லவன்”



கிவிகிஎம் எலிபெண்ட் பிக்சாஸ் தயாரித்து வெளியீடு செய்யும் முதல் திரைப்படம் வில்லவன். இத்திரைப்படத்தை இயக்குனர் வாசன் இயக்கியுள்ளார். முன்னணி கதாப்பாத்திரத்தில் புதுமுக நடிகரும் வில்லவன் திரைப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான டத்தோஸ்ரீ வினோத் மற்றும் அண்மையில் சிறந்த நடிகைக்கான விருது பெற்ற சங்கீதா கிருஷ்ணசாமி நடித்துள்ளனர்.

வில்லவன் திரைப்படத்தின் பாடல்கள் அண்மையில் தலைநகரிலுள்ள நுயு சென்றலிள்ள திரையரங்கில் மிகப்பிரம்மாண்டமாக வெளியீடு காண்டது. இசையமைப்பாளர் ஷா இசையில் பாடல் மிக அருமையாக அமைந்துள்ளது.


போடு சக்க போடு பாடல் வரிகளை அஸ்வின் சக்ரவர்த்தி எழுதி தென்னிந்திய சினிமா பாடகர் கார்த்திக் பாடியுள்ளார். அதேவேளையில் உன்னை நானே, ஓ சோரியா எனும் பாடல்களுக்கும் அஸ்வின் சக்ரவர்த்தி வரிகளை அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் 5 பாடல்கள் அமைந்துள்ளது. பாடல்களை உள்ளுர் கலைஞர்களும் தென்னிந்திய சினிமா பாடகர்களும் பாடி மெருகுட்டியுள்ளனர். அந்த வகையில், ஸ்வேதா மோகன், சுச்சித் சுரேஸன், மதனகுமார், ஸ்வார்ன தீபன், தீனேஸ் சிவன்யானம், ஷா சோவி, லா இத்திகாராஸ், ஹாயிட் கார்த்தி, அவதாரா, அனித்தா, வோய் ஜி ஆர், பராம் விவன்யானம், இந்திரன் சண்முகம், மேர்லின் நாசாவ் என அதிகமானோர் பாடியுள்ளனர்.



திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் வலையொளியிலும் இணைய கடைகளிலும் வாங்குவதற்கு எளிதான முறையில் திரைப்படக்குழு அமைத்துள்ளது. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் இப்படத்தின் பாடல்கள் சுலபமாக சென்றாடைய சமூக வலைத்தளங்களில் இப்படத்தின் பாடல்கள் பற்றி அதிகமான தகவல்களை வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

வில்லவன் திரைப்படம் முழுக்க வில்லவனை மையப்படுத்தியை நகரும். உள்ளூர் திரைப்படங்களில் பயன்படுத்தப்படாத புதிய மற்றும் விவேகமான புகைப்பட மற்றும் தொழில்நுட்பங்களை இந்த படத்தில் பயன்படுத்தியுள்ளோம். பாடல்கள் முழுமையாக இந்தியாவில் அமைக்கப்பட்டது. அதிகமான புதுமுகங்களையும் திறமையான கலைஞர்களையும் இத்திரைப்படத்தில் அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் வில்லவன் திரைப்படத்தின் இயக்குனர் வாசன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.


வில்லவன் திரைப்படத்தில் வித்தியசமான கதைக்களத்தையும் படைப்பையும் அமைத்துள்ளோம். திரைப்படப் பணிகள் முழுமையாக முடிந்தன. விரைவில் நாடு முழுவதுமுள்ள திரையரங்குகளில் வெளியீடு காணவுள்ளது. மேலும், வில்லவன் திரைப்படம் அணைவரையும் திருப்திப்படுத்தும் என்று வில்லவன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் டத்தோஸ்ரீ மோகண சுந்தரம் செய்தியாளர் சந்திப்பில் நம்பிக்கை தெரிவித்தார்.

திரைப்படத்தை பற்றி மேல் விவரங்கள் அறிய https://www.facebook.com/villavanthevigilante/ எனும் வில்லவன் முகநூலில் கண்டு கொள்ளலாம். 

No comments:

Post a Comment