மஇகா உதவித் தலைவரும் மலேசிய இந்தியர் கால்பந்து சங்கத்தின் (மீஃபா) தலைவருமான டத்தோ டி.மோகன் இன்று மேலவை உறுப்பினராக (செனட்டர்)உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
மஇகாவின் தேசிய இளைஞர் பிரிவின் முன்னாள் தலைவரான மோகன், இந்திய இளைஞர்களின் மேம்பாட்டுக்கான பல நடவடிக்கைகளை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று காலை மேலவைத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் முன்னிலையில் அவர் இப்பதவி உறுதிமொழியை ஏற்றுக் கொண்டார்.
தனது பதவியேற்பு குறித்து கருத்துரைத்த டத்தோ மோகன், “என் மீது நம்பிக்கை வைத்து எனக்கு செனட்டர் பதவி வழங்கிய பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் ஆகியோருக்கு எனது நன்றி".
“இந்த உன்னதப் பதவியின் பொறுப்பையும், அதன் மீதான எதிர்பார்ப்புகளையும் நன்கு அறிவேன். எனவே தேசிய முன்னணி அரசாங்கத்திற்கும், மஇகா, இந்திய சமுதாயத்திற்கும் என்னுடைய கடமைகளையும், பொறுப்புகளையும் சரியாகச் செய்து அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வேன் என உறுதியாகக் கூறிக் கொள்கிறேன்” தமது அறிக்கையில் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment