வி.மோகன்ராஜ், ரா.தங்கமணி
கோலாலம்பூர்-
மஇகாவின் தலைமை பொருளாளராக பதவி வகிக்கும் டத்தோஶ்ரீ எஸ்.வேள்பாரி மைபிபிபி கட்சிக்கு வந்தால் செனட்டர் பதவியை வழங்குவேன் என அக்கட்சியின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எம்.கேவியஸ் அதிரடியாக அறிவித்துள்ளார்.
மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் துன் ச.சாமிவேலு 2008ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் தோல்வி அடைந்தார். ஆனால் அத்தொகுதிக்கு பலர் வேட்பாளராக களமிறங்க முயற்சிக்கின்றனர்.
60 வயதுக்கு மேற்பட்டவர்களை ஆதரிக்க வேண்டாம் என கூறும் இளைஞர், விளையாட்டு துணை அமைச்சர் டத்தோ எம்.சரவணன், 2008இல் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் துன் சாமிவேலு போட்டி போடும்போது 70 வயதுக்கு மேற்பட்டவர் ஆவார். அப்போது அவரை ஏன் போட்டியிட வேண்டாம் என கூறவில்லை?
அத்தொகுதியில் போட்டியிட தனக்கான வாய்ப்பை பெற்றுக் கொண்டிருக்கலாம்; இல்லையேல் அவரது மகன் வேள்பாரிக்காவது தொகுதியில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்திருக்கலாம். இன்று செனட்டர் பதவிக்கும் நாடாளுமன்றத் தொகுதிக்கும் அலை மோதும் நிலையை வேள்பாரி எதிர்நோக்கி கொண்டிருக்கிறார்.
இச்சூழலில் மைபிபிபி கட்சிக்கு வேள்பாரி வந்தால் அவருக்கு செனட்டர் பதவியை வழங்குவேன் என அண்மையில் மைபிபிபி தலைமையகத்தில் நடைபெற்ற கட்சியின் மத்திய செயலவைக் கூட்டத்தின்போது டான்ஶ்ரீ கேவியஸ் இவ்வாறு கூறினார்.
No comments:
Post a Comment