Tuesday 7 November 2017

வெள்ள பாதிப்பு: மக்களுக்கு உதவிக்கரம் நீட்டியது மலேசிய மக்கள் சக்தி கட்சி

சுகுணா முனியாண்டி 

பட்டவொர்த்-
பினாங்கு மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் நிலமையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் மலேசிய மக்கள் சக்தி கட்சி களமிறங்கியது.
குறிப்பாக, இம்முறை ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தால் பட்டவொர்த் மாக் மண்டின்  பகுதி மக்கள் பெருமளவில் பாதிப்படைந்துள்ளனர். இவர்களுக்கு உதவும் பொருட்டு அவர்களுக்கு உணவுப் பொட்டலங்களை மலேசிய மக்கள் சக்தி கட்சியினர் வழங்கினர்.
இத்தகைய நடவடிக்கைகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் அமைந்துள்ளது எனவும்  இயற்கையின் துயரங்களை சமாளித்து அதிலிருந்து மீண்டு வர வேண்டும் எனவும் ஆறுதல் கூறினார் இக்கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன்.
அவசர காலங்கள்,பேரிடர் காலங்களில் மலேசிய மக்கள் சக்தி கட்சி ஒதுங்கி போகாது, மக்களுடன் இணைந்து துயரங்களில் பங்கு கொள்ளும். இதுபோன்ற காலங்களில் கட்சிகள், தங்களின்  பதவிகளையும் விருப்பு வெறுப்புகளையும் ஓரங்கட்டி விட்டு ஒன்றாக இணைந்து மக்களுக்கு சேவையற்ற வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்
இந்த மக்கள் உதவி நடவடிக்கையின்போது மக்கள் சக்தி பினாங்கு மாநிலத் தலைவர் இரா.விஜயகுமார், தலைவி சாந்தி ரத்னம், செயளாலர் லோகேந்திரன், இளைஞர் பிரிவினர், உறுப்பினர்கள் நேரடியாக களமிறங்கி மக்களுக்கு உதவிகளை வழங்கினர்.

No comments:

Post a Comment