Saturday 17 November 2018

சீபில்ட் மாரியம்மன் ஆலயம் இடமாற்றம் காண்பதில் மாற்றமிருக்காது


ரா.தங்கமணி

ஷா ஆலம்-
ஹைக்கோம் (சீபில்ட்) ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் இடமாற்றம் காண்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

மேம்பாட்டுத் திட்டங்களுக்காக இடமாற்றம் செய்யவிருந்த இவ்வாலயம் இரு தரப்பினரின் விவகராத்தால் பெரும் பிரச்சினையாக உருவெடுத்தது.

இவ்வாலயம் அமைந்துள்ள நிலத்தை ஒன் சிட்டி மேம்பாட்டு நிறுவனம் வாங்கியுள்ள நிலையில் இவ்வாலயத்திற்கு மாற்று நிலமாக யூஎஸ்ஜே 23இல் 1 ஏக்கர் நிலத்தையும் 15 லட்சம் வெள்ளியும் வழங்கப்பட்டது.

புதிய நிலத்திற்கு இடமாறுவதற்கு செல்லப்பா தலைமையிலான அணியினர் ஒப்புக் கொண்ட நிலையில் நாகராஜு அணியினர் இவ்வாலயம் இங்கேயே நிலைபெற வேண்டும் என போராட்டம் நடத்துகின்றனர்.

அண்மையில் இவ்வாலயத்திலுள்ள தெய்வச் சிலைகளை இடமாற்றும் முயற்சியின்போது நவம்பர் 22ஆம் தேதி வரை ஆலயம் மாற்றம் செய்யப்படாது என உறுதி வழங்கப்பட்டது.

இப்போது ஆலயம் மாற்றம் செய்யப்படுவது துரிதமாக மேற்கொள்ளப்படலாம் என கருதப்படுகிறது.

இதன் தொடர்பில் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவை தொடர்பு கொண்டு கேட்டபோது, இவ்விவகாரத்தில் மாநில அரசு முயன்ற வரை பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது எனவும் இனியும் ஆலயத்தை இடமாற்றம் செய்யும் நடவடிக்கையை இனி ஒத்தி வைக்க முடியாது எனவும் உயர்நீதிமன்ற ஆணைக்கு இணைக்க சட்ட ரீதியிலான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் கூறினார்.

No comments:

Post a Comment