ஷா ஆலம்-
ஆலய நிர்வாகம், மேம்பாட்டு நிறுவனம் ஆகியவற்றுக்கி இடையில் அணுக்கமான தீர்வு காணப்படும் வரையில் அடுத்தாண்டு ஜனவரி 11ஆம் தேதி சீபில்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் உடைபடாது என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் அமிருடின் சாரி தெரிவித்தார்.
நீதிமன்ற நடவடிக்கையின் தீர்ப்பு இந்நாளில் கூறப்படும் நிலையில் ஆலயம் உடைபடாது. அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து தீர்வு காணும் வரையில் இவ்வாலயம் உடைபடாது என வாக்குறுதி அளிக்கப்படும் சூழலில் இதற்கு நிரந்தரமான தீர்வு காண அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்
இவ்விவகாரத்தில் மாநில அரசாங்கம் 'நடுவராக' செயல்படுகின்றது. இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் அடுத்த செவ்வாய்க்கிழமைக்குள் சந்திப்புக் கூட்டம் நடத்தப்படும் என்று அவர் சொன்னார்.
இவ்வாலயப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வரை எவ்வித சட்டவிரோத பேரணிகளும் ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்படக்கூடாது என்ற நிபந்தனை விதித்த அமிருடின் சாரீ, இவ்வாலய விவகாரத்தில் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரையும் அழைத்து கலந்துடையாடல் நடத்தப்படும் என்றும் அவர் சொன்னார்.
No comments:
Post a Comment