Wednesday 21 November 2018

அமைச்சராக வேதமூர்த்தி நீடிக்க வேண்டும்- மலேசிய இந்து சங்கம் வலியுறுத்து


கோலாலம்பூர்-
பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தொடர்ந்து அமைச்சராக நீடிக்க வேண்டும் என்று மலேசிய இந்து சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தேசிய ஒற்றுமை, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக பதவி வகிக்கும் வேதமூர்த்தி பதவி விலக வேண்டும் என்று சில தரப்பினர் ஆதரவு கையெழுத்து வேட்டை தொடங்கியுள்ள நிலையில், வேதமூர்த்தி அமைச்சராக தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் டத்தோ ஆர்.எஸ்.மோகன் ஷான் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.

பல இன மக்கள் வாழும் மலேசியாவில் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் கொள்கைகளை கொண்டு வருவது சற்று கடினம்தான் என்றாலும் அதனை காரணம் காட்டி அமைச்சர் பதவியில் இருக்கும் ஒருவரை பதவி விலகுமாறு கூறுவதை மலேசிய இந்து சங்கம் ஒருபோதும் ஏற்காது. நாட்டின் நல்லிணக்கத்திற்கும் இந்து சமய விவகாரங்களுக்கும் பொறுப்பேற்றுள்ள அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தொடர்ந்து அமைச்சராக நீடிக்க மலேசிய இந்து சங்கம் ஆதரவு தெரிவிப்பதோடு மலேசிய இந்துக்களும் இதற்கு முழுமையான ஆதரவு வழங்க வேண்டும் என்றும் டத்தோ மோகன் ஷான் கேட்டுக் கொண்டார்.

No comments:

Post a Comment