Tuesday 6 November 2018

இந்தியர்களின் கலை, பண்பாடுகள் சுற்றுலா துறைக்கு வலு சேர்க்கும்- மந்திரி பெசார்

ரா.தங்கமணி, புனிதா சுகுமாறன்

ஈப்போ-
ஒவ்வொரு சமயத்தினரின் கலை, கலாச்சார, பண்பாடுகள் பிற இனத்தவர்களிடம் பகிர்ந்துக் கொள்ளப்பட வேண்டும் என்று பேரா மாநில மந்திரி பெசார் டத்தோஶ்ரீ அஹ்மாட் பைசால் அஸுமு வலியுறுத்தினார்.

நாட்டின் நல்லிணக்கத்திற்கு அனைத்து இனத்தவர்களிடையேயான சகிப்புத்தன்மையும் நல்லுறவும் மேம்பாடுவதற்கு அவரவர் சமய, பண்பாட்டுகளை பகிர்ந்து கொள்வது அவசியமாகும்.

குறிப்பாக, இந்தியர்களின் கலை, பண்பாட்டுகள்  சிறப்பானதாகவும் பிறரை அதிகம் கவர்வதாகவும் அமைந்துள்ளன. இத்தகைய சிறப்பம்சம் இம்மாநிலத்தின்  சுற்றுலா துறை வளர்ச்சிக்கு பெரிதும் வழிவகுக்கும்.

மாநிலத்தின் சுற்றுலா துறை மேம்படுத்துவதற்கு ஏதுவாக அவரவர் சமய கலை, பண்பாடுகளை பிறருடன் பகிர்ந்து கொண்டாலே போதும். கலை, பண்பாட்டுகள் பிற நாட்டினரை அதிகம் ஈர்ப்பதால் சுற்றுலா துறையை மேம்படுத்த அது வழிவகுக்கும் என நேற்று ஈப்போ, லிட்டில் இந்தியா வளாகத்தில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்ட நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு கூறினார்.

பேரா மாநில இஸ்லாம் அல்லாதோர் விவகாரப் பிரிவு, பேரா மாநில அரசாங்க இந்திய பணியாளர் சங்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு நடைபெற்றது.

No comments:

Post a Comment