Tuesday 6 November 2018

இருளில் கிடந்த மலேசியர்களுக்கு வெளிச்சம் கிடைத்துள்ளது - கணபதிராவ்


ரா.தங்கமணி

கிள்ளான் -
கடந்த 60  ஆண்டுகளாக இருளில் கிடந்த மலேசிய இந்தியர்களுக்கு ஒளி நன்னாளாக இவ்வாண்டு தீபாவளி அமைந்துள்ளது என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் தெரிவித்தார்.

நாடு சுதந்திரம் அடைந்தது முதல் தேசிய முன்னணி ஆட்சியே இதுவரை நடைபெற்று வந்தது. ஆனால் நடந்து முடிந்த நாட்டின் 14ஆவது தேசிய முன்னணி ஆட்சிக்கு முடிவு கட்டி பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியை புதிய அரசாங்கமாக மக்கள் தேர்ந்தெடுத்தனர்.

கடந்த 60 ஆண்டுகளாக இருளில் மூழ்கிக் கிடந்த மலேசியர்கள் வாழ்வு 61ஆம் ஆண்டில் வெளிச்சம் பெற்றுள்ளது.

குறிப்பாக, இந்தியர்களின் வாழ்வில் இந்த ஆட்சி மாற்றம் புதிய நம்பிக்கையையும் விடிவெள்ளியையும் விதைத்துள்ளது.

இவ்வாண்டு கொண்டாடப்படும் தீபாவளி கொண்டாட்டம் நிச்சயம் இந்தியர்களின் வாழ்வில் பிரகாசமான வெளிச்சத்தை பிரதிபலிப்பதாக உள்ளது.

புதிய அரசாங்கம், மக்கள் விரும்பிய தலைவர்கள் என புதிய அரசாங்கம் அமைந்துள்ள சூழலில் மக்களுக்கான நலத் திட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன என்று கிள்ளான், லிட்டில் இந்தியாவில் நடைபெற்ற சிலாங்கூர் மாநில தீபாவளி சிறப்பு கொண்டாட்ட நிகழ்வில் உரையாற்றுகையில் கணபதிராவ் இவ்வாறு கூறினார்.

இந்நிகழ்வில் மாநில மந்திரி பெசார் அமிருடின் சாரி உட்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment