Sunday 18 November 2018

கதை என்னுடையது; சர்ச்சையில் சிக்கியது 'திமிரு புடிச்சவன்'- எழுத்தாளர் ராஜேஷ் குமார் குற்றச்சாட்டு

சென்னை-
சர்கார் படத்தைத் தொடர்ந்து 'திமிரு புடிச்சவன்' திரைப்படமும் கதை திருட்டு விவகாரத்தில் மாட்டிக் கொண்டுள்ளது.

நடிகர் விஜய் ஆண்டனி, நடிகை நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடிப்பில் இயக்குனர் கணேசா இயக்கத்தில் வெளியாகி திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கும் 'திருமி புடிச்சவன்' திரைப்படத்தின் கதை கரு தான் எழுதிய  'ஓன் + ஓன் = ஜீரோ' ஆன்லைன் தொடரின் கருவை மையமாக கொண்டுள்ளது என பிரபல எழுத்தாளர் ராஜேஷ் குமார் கூறியுள்ளார்.

18 வயதுக்கு குறைவான சிறுவர்களை Brain Wash செய்து தமக்கு வேண்டாதவர்களை கொலை செய்து சட்டத்தின் பிடியில் இருந்து சமூக விரோதிகள் எப்படி தப்பித்துக் கொள்கிறார்கள் என்பது பற்றி எழுதியிருந்தேன்.
அந்த கருவை அப்படியே காப்பி அடித்து 'திமிரு புடிச்சவன்' படத்தை எடுத்துள்ளார்கள் என்று அவர் குற்றஞ்சாட்டினார்.

தமிழ்ச் சினிமாவில் அண்மைய காலமாக கதை திருட்டு விவகாரம் சர்ச்சையாக உருவெடுத்து வருகின்ற நிலையில் திமிரு புடிச்சவனும் அந்த வரிசையில் இணைந்துள்ளது.

No comments:

Post a Comment