ரா.தங்கமணி
கோலாலம்பூர்-
14ஆவது பொதுத் தேர்தலுக்கு முந்தைய நிர்வாகக் குழு அமையவில்லையென்றால் மைபிபிபி கட்சியின் பதிவு ரத்தாகும் அபாயத்தை எதிர்கொண்டிருப்பதாக அதன் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எம்.கேவியஸ் தெரிவித்தார்.
14ஆவது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக கட்சியில் சிலர் குளறுபடிகளை ஏற்படுத்தினர். ஆயினும் நானே இக்கட்சியின் தேசியத் தலைவர் என்று சங்கங்களின் பதவிலாகா (ஆர்ஓஎஸ்) உறுதிபடுத்தியது.
இக்கட்சியின் நிர்வாகக் குழுவில் 14ஆவது பொதுத் தேர்தலுக்கு முந்தைய தரப்பினர் அமர்த்த வேண்டும் என்று ஆர்ஓஎஸ் அறிவுறுத்தியிருந்தது.
ஆயினும் இந்த நிர்வாகக் குழுவில் இடம்பெற கட்சியின் முதன்மை உதவித் தலைவர் டத்தோஶ்ரீ மெக்லின் டி குருஸ் உடன்பட மறுப்பதால் கட்சி பதிவு ரத்தாகும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளது.
பேச்சுவாத்தைக்கு மெக்லின் டி குருசை அழைத்தபோதிலும் அவர் தன்னை தேசியத் தலைவராக ஏற்க மறுக்கிறார். ஆர்ஓஎஸ் என்னை அங்கீகரித்த போதிலும் அவர் என்னை அங்கீகரிக்க மறுக்கிறார்.
இதன் காரணமாக வரும் டிசம்பர் மாதம் 12ஆம் தேதி வரை காலக்கெடு வழங்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த நிர்வாகக்குழு அமையவில்லையென்றால் கட்சி பதிவு ரத்தாகும் சூழல் நிலவலாம்.
எந்த கட்சியை கைப்பற்ற வேண்டும் என்று சிலர் துடித்தார்களோ இன்று அவர்களாலேயே கட்சி பதிவு ரத்தாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
கட்சி பதிவு ரத்தாகாமல் இருக்க சில நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறேன். ஆனால் பதிவு ரத்தானால் புதிய கட்சியை தொடங்குவதற்கும் நான் தயாராகவே இருக்கிறேன் என்று டான்ஶ்ரீ எம்.கேவியஸ் 'பாரதம்' இணையதளத்திற்கு வழங்கிய சிறப்பு நேர்காணலின்போது கூறினார்.
No comments:
Post a Comment