சீபில்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் ஏற்பட்ட மோதலுக்கு காரணமாக புல்லுருவி ஒருபோதும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது என்று பிரதமர் துன் மகாதீர் முகம்மது தெரிவித்தார்.
இந்தியர்களுக்கும் மற்றொரு கும்பலுக்கும் இடையே நிகழ்ந்த இந்த மோதலில் இனவாதமோ, மதப் பிரச்சினையோ காரணம் கிடையாது. மாறாக இது ஒரு குற்றச்செயல் மட்டுமே.
பிரதமர் துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், போலீஸ் இவ்விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை விரைந்து எடுக்கும்.
போலீஸ்காரர்களும் பொது உடைமைகளும் சேதப்படுத்தப்பட்டதன் பேரில் குற்ற நடவடிக்கையின் அடிப்படையிலே போலீசார் இந்த மோதல் சம்பவத்தை விசாரித்து வருகின்றனர் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment