வாஷிங்டன்-
அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்பின் டுவிட்டர் கணக்கு திடீரென
முடங்கியது. சுமார் 11 நிமிடங்கள் செயல்பாடு இன்றி இருந்தது. அவரது டுவிட்டர் பக்கத்துக்கு
சென்று தொடர்பு கொண்டபோது எந்த
விதமான தகவலும் கிடைக்கவில்லை.
டிரம்ப் கடந்த 2009ஆம் ஆண்டு முதல் ‘டுவிட்டர்’ சமூக வலைதளத்தில்
கணக்கு வைத்துள்ளார். இதன் வழியாக தான் தனது கொள்கை கோட்பாடுகளை அவர் வெளியிட்டு வருகிறார்.
கடந்த 2016ஆம் ஆண்டு அதிபர் தேர்தலின்போது டுவிட்டர் இணையதளத்தின் மூலம் தேர்தல் பிரச்சாரம், ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தற்போது அதிபரான பிறகும் தொடர்ந்து டுவிட்டரை பயன்படுத்தி வருகிறார்.
இவரை 4 கோடியே 17 லட்சம் பேர் பின் தொடருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment