Friday 3 November 2017

ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத் தேர்தல் தேதி- இன்னும் ஓரிரு நாளில் வெளியாகலாம்

சென்னை-
தமிழக முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் மறையொட்டி காலியான ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத் தேர்தல் தேதி இன்னும் ஓரிரு நாளில் வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

கடந்தாண்டு டிசம்பர் 5ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்ததால் காலியான ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி நடத்தப்படுவதாக இருந்தது.

இந்த இடைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதாக எழுந்த புகாரை அடுத்து தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் கடந்த 12ஆம் தேதி இமாச்சல பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பின்போது தலைமை தேர்தல் ஆணையர் ஏ.கே.ஜோதி டிசம்பர் 31க்குள் ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என கூறியிருந்தார்.

இச்சூழலில் இத்தொகுதிக்கான இடைத் தேர்தல் தேதி இன்னும் ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளன.

No comments:

Post a Comment