வேலை தேடும் பெண்ணை பாலியல் உறவுக்கு அழைக்கும்
ஓர் ஆசாமிக்கு காமம் என்ற மனநோய் உள்ளது என முத்திரை குத்தும் சில தரப்பினரின்
செயல் ஒரு தவறான முன்னுதாரணத்திற்கு அடித்தளமாக அமைந்து விடலாம் என்பதை மறந்து
விடக்கூடாது.
பாலியல் உறவுக்கு அழைப்பதை தெள்ளத் தெளிவாக
பேசும் அந்த ஆடவரை மனநோயாளி என முத்திரை குத்தும் குறிப்பிட்ட ஒரு கட்சியின் செயல்
கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
காமம் என்பது மனநோய் என்றால் நாளை கற்பழிப்பு புரிபவன்
கூட 'எனக்கு மனநோய் உள்ளது, சிகிச்சைக்காக மருத்துவமனையில்
அனுமதியுங்கள்' என்ற வாதத்தை முன்வைத்தால் அது சமூகத்திற்கு மிகப்
பெரிய மருட்டலாக உருவெடுத்து விடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
நாட்டில் நடக்கும் கற்பழிப்பு சம்பவங்களுக்கு 'காமம்' என்ற உணர்ச்சியே காரணமாக அமைகிறது. அதை கூட
ஒரு 'நோய்' என வகைப்படுத்து
அறிவிலிகளின் செயலை சம்பந்தப்பட்ட கட்சியின் தலைமைத்துவம் கண்டிக்க வேண்டும். கண்டிக்குமா...?
No comments:
Post a Comment