Saturday 4 November 2017

சுங்கை சிப்புட்டில் வெள்ளம்: மகாத்மா காந்தி கலாசாலை உட்பட பல பகுதிகள் பாதிப்பு


ரா.தங்கமணி

சுங்கை சிப்புட், நவ. 4-
இரண்டு மணி நேரம் விடாது பெய்த மழையின் காரணமாக சுங்கை சிப்புட் வட்டாரத்தின் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது.
பிற்பகல் 4.00 மணியளவில்  இடை விடாது  பெய்த மழையினால் மகாத்மா காந்தி கலாசாலை தமிழ்ப்பள்ளி உட்பட அதை சுற்றியுள்ள வீடமைப்புப் பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
இதனால் பல வீடுகளில் வெள்ளம் புகுந்து சேதம் விளைவித்தது. வீட்டுக்குள் புகுந்த நீரை வெளியேற்ற வேண்டிய இன்னலுக்கு இங்குள்ள குடியிருப்பாளர்கள் ஆளாகினர்.

இச்சம்பவத்தை கேள்வியுற்ற லிந்தாங் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஹாஜி சூல்கிப்லி ,சுங்கை சிப்புட் மஇகா தொகுதி தலைவர் இளங்கோவன் முத்து,செயலாளர் கி.மணிமாறன் ஆகியோர் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டனர். வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு ஆறுதல் கூறிய டத்தோ சூல்கிப்ளி, அவர்களுக்குதேவைபடும் உதவிகளை செய்வதாக தெரிவித்தார்.

மேலும் சமீபகாலமாக சுங்கை சிப்புட் நகரத்தில் ஏற்படும் வெள்ளப் பிரச்சினைக்கு உரிய தீர்வு காண சம்பந்தப்பட்ட இலாகாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment