பட்டர்வொர்த்-
நம்மை சுற்றி மகிழ்ச்சியான வாழ்க்கையோடு சிரித்த முகத்துடன் நாம் பார்து மகிழ்ந்து வரும் மனிதர்களின் சிரிப்புக்கு முன்னால் உறங்கிக் கிடக்கும் கண்ணீர் கலந்த சோகம் நாம் கண்களுக்கு தெரிவதில்லை.
இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் நம்மை கடந்துச் செல்லும் கண்ணீர் சுமந்த கண்களை பார்க்க நமக்கு கால அவகாசம் இல்லை; இருந்த போதும் தக்க சமயத்தில் உதவிகரம் நீட்டுவோர் கடவுளுக்கு சமமாக மதிக்கப்படுகின்றனர்.
அந்த வகையில் விபத்தில் ஒன்றினால் படுத்தப் படுக்கையான கணவர், 2 பெண் பிள்ளைகளோடு 'மேகியே' உணவு; கண்ணீரே வாழ்க்கை' என்று வறுமை நிலையில் வாழ்ந்து வரும் முனியம்மா த /பெ தி தாலமன் (வயது 40) துயர நிலையை அறிந்த மலேசிய மக்கள் சக்தி கட்சி தற்போது அவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றியுள்ளது .
முதலில் நாங்கள் சுங்கை பாக்காப்பில் வாழ்ந்து வந்தோம். பின்னர் கடந்த மார்ச் மாதம் தம் கணவர் ஜெகநாதன் த/ பெ கோவிந்தசாமி (வயது 42)விபத்துக்குள்ளானார். அந்த விபத்தினால் அவர் நடக்க இயலாமல் போனது. ஆகையினால் தாம், கணவர், இரு பெண் பிள்ளைகளான முனீஸ்வரி த பெ ஜகநாதன், நீலம்பரி த /பெ ஜெகநாதன் ஆகியோர் செபெராங் பிறை பாக்காப் இண்டா என்ற குடியிருப்புப் பகுதியி தன் கணவரின் உடன் பிறப்போடு வாழ்ந்து வந்தோம். ஆறே மாதங்கள் அந்த வீட்டில் வசித்து வந்த எங்களை உடன் பிறப்புகளே வீட்டை விட்டு வெளியேற கட்டளையோடு அவசர அவசரமாக மீன்சாரம் ,தண்ணீர் கூட இல்லாத வீட்டில் வீட்டு விட்டனர்.
நடக்க இயலாது படுத்த படுக்கையான கணவர், இடைநிலைப்பள்ளியில் பயிலும்ம் பிள்ளைகள் என்ற நிலையோடு ஒரு வாய் சோற்றுக்கு வழி இல்லாமல் அல்லல்பட்டு வந்தோம். கணவருக்கு சமுக இலாகாவிடமிருந்து வழங்கப்படும் 300 வெள்ளியில் மட்டும்தான் எல்லா செலவையும் ஈடுகட்டும் நிலை.
எங்கள் நிலையை அப்பகுதியின் அரசு சாரா இயக்க தலைவர்கள் தங்களுக்கு அறிமுகமான சுப்பிரமணியம், அவரின் நண்பரான ஆசிரியர் மோகன் ஆகியோர் எங்களுக்கு உணவு உட்பட அடிப்படை தேவைகளை ஏற்பாடு செய்து உதவிகள் செய்தனர் .
இந்நிலையில் 8 மாதம் மட்டுமே தற்போது தங்கியிருக்கும் வீட்டில் கால அகவாசம் வழங்கிருக்கும் நிலையில் மேலும் அல்லல்பட்டு வந்த முனியம்மா குடும்ப நிலையை அறிந்த மலேசிய மக்கள் சக்தி சட்ட ஆலோசகர் பரம்நாத், மலேசிய மக்கள் சக்தி கட்சியின் நிபோங் திபால் தலைவர் கவிகுமார் முயற்சியால் இப்பிரச்சனை அக்கட்சியின் தேசியத்தலைவர் டத்தோஶ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன் பார்வைக்குக் கொண்டுச் செல்லப்பட்டது.
இவருக்கு உதவி செய்யும் வகையில் மக்கள் சக்தி பினாங்கு மாநில அலுவலகத்தில் சந்திப்பு நடைபெற்றது. இந்நிகழ்வில் அம்மாதுவிற்கு ஒரு மாதத்திற்குரிய உணவு பொருட்கள் உட்பட 500 வெள்ளியை டத்தோஶ்ரீ ஆர்.எஸ். தனேந்திரன் வழங்கினார். அதுமட்டுமின்றி நவம்பர் மாதம் தொடங்கி ஒருவருடத்திற்கு ஒவ்வொரு மாதமும் 200 வெள்ளி மதிப்பிலான மளிகைப் பொருட்கள், சமையல் பொருட்கள் வழங்கப்படும் என்றும் வருங்காலத்தில் அவர்களது பிள்ளைகளின் படிப்பிற்கு தேவையான புத்தகங்கள் ,உடைகள், உபகரணப் பொருட்களை வழங்கப்படவுள்ளதாக அவர் கூறினார் ,அவர் வசிப்பதற்கான குறைந்த வாடகை வீடு விண்ணப்பங்களும் செய்து தர போவதாகவும் அவர் குறிப்பிட்டார் ,
இந்த மாதுவை நேரில் சந்தித்து பேசினேன். அவர் எதிர்நோக்கும் பிரச்சினைகளை சொன்னார். இவர்களின் நிலையை கண்டு உள்ளம் உறுகி போனேன். தீபாவளியின்போது புதிய ஆடையின்றி உண்ண உணவின்றி 'மேகி' மட்டுமே உண்டு பரிதவித்திற்கும் இக்குடும்பத்தின் நிலை கண்டு மனம் வருந்தினேன். .
நமக்கு தெரிந்து துயரத்திலும் கஷ்டத்திலும் மூழ்கிருப்பவர்களின் எண்ணிக்கை சிலரே. ஆனால் கண்ணுக்கு தெரியாமல் வறுமை பிடியில் சிக்கியிருப்பவர்கள் ஏராளமானோர். இப்படிப்பட்ட துயரங்களை மக்கள் பார்வைக்கு கொண்டு வர வேண்டும். அது நமது கடமை என்ற அவர் ,எனவே பிள்ளைகளுக்கும் இக்குடும்பத்திற்கும் மக்கள் சக்தி கட்சி நிச்சயம் கை கொடுக்கும் என்றும் டத்தோஶ்ரீ ஆர்.எஸ். தனேந்திரன் தெரிவித்தார்.
இந்த சந்திப்பின் போது மலேசிய மக்கள் சக்தி கட்சியின் பினாங்கு மாநிலத் தலைவர் இரா.விஜயகுமார் உட்பட கட்சியின் சட்ட ஆலோசகர் பரம்நாத், உறுப்பினர்கள்,செயலாளர்கள், மகளிர் அணி தலைவி சாந்தி ஆகியோர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment