Saturday 4 November 2017

பேராக் சுல்தான் பிறந்தநாளில் 331 பேருக்கு விருதுகள்


புனிதா சுகுமாறன்

ஈப்போ-
இன்று மேன்மை தங்கிய பேராக் சுல்தான் நஸ்ரின் முயிசுடின் ஷா அவர்களின் 61ஆவது பிறந்தநாளை முன்னிட்டு 331 பேருக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளன.
டான்ஶ்ரீ நூர் ரஷிட் பின் இப்ராஹிம்
பேராக் அரச விருதான டிகே விருதை கெடா சுல்தான் டான்ஶ்ரீ துன்கு சாலேஹுடின் சுல்தான் பட்லிஷா  பெறவுள்ளார். டத்தோஶ்ரீ எனப்படும் எஸ்.பி.டி.எஸ். அரச மலேசிய போலீஸ் படையின் துணைத் தலைவர் டான்ஶ்ரீ நூர் ரஷிட் பின் இப்ராஹிம் பெறுகிறார்.
ரவிச்சந்திரன் ராமச்சந்திரன்
அதோடு . பிஎம்பி விருதை டாக்டர் ஜெபராஜ் ரோபர்ட் பீட்டர், டாக்டர் சுப்பிரமணியம் நாராயணன், க.தேவராஜு, பேராக் போதைப்பொருள் குற்றப்பிரிவு அதிகாரி ரவிச்சந்திரன் ராமச்சந்திரன் ஆகியோர் பெறுகின்றனர்.
ஜொஸ்பின் மேரி சிங்கராயர்
ஏஎம்பி விருதை ஜீவரத்தினம் பீபி, ஜொஸ்பின் மேரி சிங்கராயர், மகேந்திரன் ராமச்சந்திரன், மூர்த்தி கணபதி, பெருமாள்சாமி முனியாண்டி, மணிவேல் சுப்பிரமணியம் ஆகியோர் பெறுகின்றனர்.
ராமேஸ்வரி முனுசாமி
பிபிடி விருதை தாப்பா வட்டார தமிழ்நேசன் நிருபர் திருமதி ராமேஸ்வரி முனுசாமி, சங்கர் ராஜகோபால், சிவன்குமார் சுப்பிரமணியம் ஆகியொர் பெறுகின்றனர்.
மகேந்திரன் ராமச்சந்திரன்- ஏஎம்பி
பிஜேகே விருதை திருமதி மல்லிகா கந்தசாமி, சரஸ்வதி மெய்யப்ப செட்டியார், சுப்பிரமணியம் பெருமாள் ஆகியோர் பெறுகின்றனர். 

No comments:

Post a Comment