Friday, 3 November 2017

பினாங்கு மக்களுக்கு வெ.300 இலவச மருத்துவம்


ஜோர்ஜ்டவுன்-
‘சுகாதாரமிக்க பினாங்கு’ எனும் திட்டத்தின் கீழ் பினங்கிலுள்ள மக்களுக்கு 300 வெள்ளிக்கான இலவச மருத்துவத்தை அறிவித்துள்ளது பினாங்கு அரசு,

பினாங்கு மாநிலத்தின் 2018க்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த மாநில முதல்வர் லிம் குவான் எங், இலவச சுகாதாரத்தை பினாங்கு மக்கள் பெற்றுக்  கொள்ளும் வகையில் 300 வெள்ளி மதிப்புடைய மருத்துவ அட்டை வழங்கப்படும்.

அடுத்தாண்டு தொடங்கி தனியார் கிளினிக்குகளில் மருத்துவ சோதனை செய்துவதற்கு ஏதுவாக 60 மில்லியன் வெள்ளியை பினாங்கு அரசு ஒதுக்கியுள்ளது.

‘ஐ லவ் பினாங்கு’ எனும் மின்னியல் அட்டையை பெறுபவர்கள் தனியார் கிளினிக்குகளில் சிகிச்சையும் ஆலோசனையும் பெறலாம். ஒவ்வொரு முறையும் சிகிச்சைக்கு செல்லும்போது 50 வெள்ளியை இந்த அட்டையிலிருந்து பயன்படுத்திக் கொள்ளலாம் என அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment