Thursday 2 November 2017

பக்காத்தானின் சின்னம் நிராகரிக்கப்படலாம்- துன் மகாதீர்

கோலாலம்பூர்-
ஒரு குடையின் கீழ் போட்டியிடுவதற்கு ஏதுவாக நம்பிக்கைக் கூட்டணி (பக்காத்தான் ஹராப்பான்) விண்ணப்பித்துள்ள புதிய சின்னத்தை தேசிய பதிவிலாகா (ஆர்.ஓ.எஸ்) நிராகரிக்கலாம் என அதன் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமது தெரிவித்தார்.

நம்பிக்கைக் கூட்டணியை கண்டு ஆளும் அரசாங்கம் பயப்படுவதால் அதன் சின்னத்தை பொதுத் தேர்தலுக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக நிராகரிக்கபடலாம்.

எங்களை நிராகரிப்பதற்காக அரசாங்கம் எத்தகைய நடவடிக்கைகளையும் மேற்கொள்ளலாம் என நாங்கல் எதிர்பார்க்கிறோம்.  ஆயினும் பக்காத்தான் ஹராப்பானுக்கு 'பிளான் பி' இருப்பதாகவும் அதை இப்போது கூறமுடியாது எனவும் அவர் என அவர் குறிப்பிட்டார்.

பக்காத்தான் ஹராப்பானின் சட்டத்திட்டங்கள் கடந்த ஜூலை 24ஆம் தேதியும் அதன் சின்னம் ஜூலை 28ஆம் தேதியும் தேசிய பதிவிலாகாவிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் சின்னத்தில் 'ஹராப்பான்' என மட்டுமே பயன்படுத்தப்படுவதால் 'பக்காத்தான் ஹராப்பான்' என  முழுமையாக பயன்படுத்தும்படி ஆர்ஓஎஸ் கேட்டுக் கொண்டது.

ஆர்ஓஎஸ் கேட்டுக் கொண்டதற்கிணங்க புதிய சின்னம் வழங்கப்பட்டது. கடந்த செப்டம்பர் 11ஆம் தேதி தொடர்பு கொண்டபோதுகூட எவ்வித தகவலும் கிடைக்கப்பெறவில்லை என துன் மகாதீர் கூறினார்.

No comments:

Post a Comment