Tuesday, 3 April 2018

சீன விண்வெளி நிலையம்; தென் பசிபிக் கடலில் விழுந்தது


பெய்ஜிங்-
செயலற்ற நிலையில் விண்வெளியில் சுற்றிக் கொண்டிருந்த சீனாவின் 'தியாங்காங்-1' விண்வெளி நிலையம் இன்று உள்ளூர் நேரப்படி தென் பசிபிக் கடலில் விழுந்துள்ளதாக சீனாவின் விண்வெளி பொறியியல் அலுவலகம் தெரிவித்தது.

2011ஆம் ஆண்டு சீனா ஏவிய இந்த விண்வெளி நிலையம் கடந்த 2016 மார்ச் 21ஆம் தேதி செயலிழந்ததாக சீனா அறிவித்தது. விண்வெளியில் சுற்றி திரிந்த இந்த விண்வெளி நிலையம் பூமியை நோக்கி வர தொடங்கியது. அதன் பாகங்கள் மார்ச் 30 முதல் ஏப்ரல் 2ஆம் தேதிக்குள் பூமியில் வந்து விழும் என விஞ்ஞானிகள் கணித்திருந்தனர்.

இந்நிலையில் இன்று உள்ளூர் நேரப்படி 10.15 மணியளவில் ஒரு பேருந்து அளவிலான பாகம் பூமியில் விழுந்திருப்பதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பூமியின் வளிமண்டல பகுதியில் இன்று நுழைந்த விண்வெளி நிலையம் அதிவேகமாக பூமியை நோக்கி வந்தபோது காற்று உராய்வினால் பெரும்பாலான பகுதிகள் எரிந்தன.

விண்வெளி நிலையத்தின் என்ஜின் போன்ற கனமான பாகம் விழுந்திருக்கலாம் என கூறப்படும் வேளையில் தகிட்டி தீவின் வடமேற்கில் விழுந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

பூமியில் விழுந்த பாகங்களை தேடும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

No comments:

Post a comment