Thursday 26 April 2018
டான்ஶ்ரீ கேவியஸ் விலகவில்லை; நீக்கப்பட்டார்- மைபிபிபி
பெட்டாலிங் ஜெயா-
மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் பதவியிலிருந்து டான்ஶ்ரீ எம்.கேவியஸ் விலகவில்லை. மாறாக அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார் என அக்கட்சியின் தலைமைச் செயலாளர் டத்தோ மோகன் கந்தசாமி கூறினார்.
கேவியஸ் கட்சியிலிருந்து விலகுகிறார் என்ற கடிதத்தை இன்றுதான் மைபிபிபி கட்சி பெற்றது. ஆனால் அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார் என 24ஆம் தேதி தேசிய முன்னணி தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் மன்சோரிடம் வழங்கப்பட்டது.
தேசிய முன்னணிக்கும் மைபிபிபிக்கும் இடையிலான நல்லுறவை சிதைக்கும் வகையில் டான்ஶ்ரீ கேவியஸ் செயல்பட்டதாலும் அறிக்கைகள் விடுவதாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கட்சியின் மத்திய செயலவைக் கூட்டத்தில் கூடி எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் கட்சியின் சட்டவிதிகளுக்கு எதிராக செயல்பட்டதால் கேவியசை கட்சியிலிருந்து நீக்குவதாக அவர் சொன்னார்.
இதற்கு முன், இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர், கூட்டரசுப் பிரதேச மைபிபிபி தலைவர், பேராக் மாநில மைபிபிபி ஆலோசகர் ஆகிய பதவிகளிலிருந்து விலகுவதாக டான்ஶ்ரீ கேவியஸ் டுவிட்டர் சமூக வலைத்தளத்தின் வழி அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment