புனிதா
ஈப்போ,
நாட்டின் 14 வது பொது தேர்தல் நெருங்கிகொண்டிருக்கும் வேளையில், மெகிழம்பு சட்டமன்றத் தொகுதியில் தாம் போட்டியிடவில்லை அதன் சட்டமன்ற உறுப்பினர் லிம் பெக் ஹா அறிவித்தார்.
இளம் தலைமுறையினருக்கு வழிவிட வேண்டும் என்ற உன்னத நோக்கில் 14ஆவது பொதுத் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து பின்வாங்கியுள்ளதாக ஜசெக அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.
கடந்த 2004ஆம் ஆண்டில் துரோனோ சட்டமன்றத் தொகுதியில் முதல் முறையாக போட்டியிட்டு தோல்வி கண்டார். அதை தொடர்ந்து, 2008ஆம் ஆண்டிலும் 2013ஆம் ஆண்டிலும் மகிழம்பு தொகுதியில் போட்டியிட்டு இரு தவணையிலும் வெற்றி பெற்றார்.
இதனிடையே, லிம் பெக் ஹாவின் முடிவை கட்சி மேலிடம் மதிப்பதாகவும் இளம் தலைமுறையினருக்கு வழிவிடும் அவரின் பண்பு ஜசெகவின் நன்மதிப்பை புலபடுத்துகிறது என பேராக் மாநில ஜசெக தலைவர் டத்தோ ஙா கோர் மிங் கூறினார்.
No comments:
Post a Comment