Thursday 19 April 2018

பிகேஆர் சின்னத்தின் கீழ் எதிர்க்கட்சியினர் போட்டி- தேர்தல் ஆணையம் 'பச்சை விளக்கு'




பெட்டாலிங் ஜெயா-

நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சியினர் கெஅடிலான் சின்னத்தில் போட்டியிடுவதற்கு தேர்தல் ஆணையம் 'பச்சை விளக்கு' காட்டியுள்ளது.

எதிர்க்கட்சியின் வேட்பாளர்கள் பிகேஆர் சின்னத்தின் கீழ் போட்டியிடுவதற்கும் அதன் சின்னத்தை பயன்படுத்தி கொள்வதற்கும் பிகேஆர் தலைமைத்துவம் அனுமதி வழங்க வேண்டுமே தவிர தேர்தல் ஆணையம் அல்ல என வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் வாயிலாக தெரியவருகிறது.

அதன் அடிப்படையில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியைச் சேர்ந்த பிகேஆர், டிஏபி, அமானா நெகாரா கட்சி, பிரிபூமி பெர்சத்து மலேசியா ஆகிய நான்கு கட்சிகளின் வேட்பாளர்களும் பிகேஆர் சின்னத்தின் கீழ் போட்டியிடவுள்ளனர்.

No comments:

Post a Comment