Sunday 29 April 2018
பிகேஆர் வேட்பாளர் சிவமலரின் வேட்புமனு நிராகரிப்பு
கோலசிலாங்கூர்-
புக்கிட் மெலாவத்தில் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட முனைந்த பிகேஆர் கட்சியின் வேட்பாளர் சிவமலர் கணபதியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.
இந்த சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுபவர் அவ்வட்டாரத்தில் வசிப்பவராகவோ அல்லது அம்மாநிலத்தில் உள்ளவராக இருக்க வேண்டும் என கோலசிலாங்கூர் தேர்தல் ஆணைய அலுவலக அதிகாரி ரஹிலா ரஹ்மார் விவரித்தார்.
கோலசிலாங்கூர், புக்கிட் மெலாவத்தி சட்டமன்றத் தொகுதியில் சிவமலர் போட்டியிட முனைந்தாலும் அவரது அடையாள அட்டையில் பகாங், ரவூப் பகுதியை வீட்டு முகவரியாக கொண்டுள்ளது என்றார் அவர்.
சிவமலரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு பதிலாக ஜுவாரியா சூல்கிப்ளி வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment