Wednesday 11 April 2018

பேரா மாநிலத்தை நம்பிக்கைக் கூட்டணி கைப்பற்றும்- டத்தோ அமாட் பைஸால்

 புனிதா சுகுமாறன்

ஈப்போ:
நாட்டின் 14 பொதுத் தேர்தலில் நம்பிக்கை கூட்டணி மக்கள்ளிடமிருந்து மாபெரும் ஆதரவை பெற்று பேராக் மாநிலத்தை கைப்பற்றும் என பேராக் மாநில நம்பிக்கை கூட்டணியின் தலைவர் டத்தோ அமாட் பைஷால் தெரிவித்தார்.

இன்று இங்குள்ள ரிவர் பிராண்ட் ஹோட்டலில் நடைபெற்ற பேரா மாநிலத்தின் நம்பிக்கைக் கூட்டணியின் கொள்கை அறிக்கை வெளியிட்டு நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு கூறினார்.

இம்மாநில மக்கள் நலனில் அக்கறை செலுத்தும் வகையில், பல்வேறு சமூகத் திட்டங்களை முன்னிறுத்தி தேர்தல் கொள்கை அறிக்கையை வெளியிடப்பட்டது.  பேராவில்  நம்பிக்கை கூட்டணி நிச்சயம் ஆட்சியை கைப்பற்றுவதோடு இந்த அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தப்படும் என அவர் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.



No comments:

Post a Comment