Tuesday, 24 April 2018

4 முனை போட்டிக்கு தயாராகிறது சுங்கை சிப்புட்?


ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலை முன்னிட்டு சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் 4 முனை போட்டி நிலவுவதற்காக சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன.

இத்தொகுதியில் தேசிய முன்னணி சார்பில் மஇகாவின் துணைத் தலைவரும் பிரதமர் துறை துணை அமைச்சருமான டத்தோஶ்ரீ எஸ்.கே.தேவமணி, பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி சார்பில் ஊத்தான் மெலிந்தாங் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கேசவன், பிஎஸ்எம் கட்சி சார்பில் டாக்டர் மைக்கல் ஜெயகுமார், பாஸ் கட்சியின் வேட்பாளர் என நான்கு முனை போட்டி நிலவுவது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நான்கு வேட்பாளர்கள தவிர்த்து சுயேட்சை வேட்பாளர்களாக சிலர் களமிறங்கலாம் என அறியப்படுவதால் இத்தொகுதியில் போட்டி கடுமையாகலாம் என கணிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment