Monday 2 April 2018

ஏப்.2இல் நாடாளுமன்றம் கலைக்கப்படுகிறது?- 'தீயாய்' பரவும் தகவல்


ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில் நாளை 2ஆம் தேதி நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என பரபரப்பான தகவல் தீயாய் பரவிக் கொண்டிருக்கின்றது.

விரைவில் நடைபெறலாம் என கருதப்படும் 14ஆவது பொதுத் தேர்தலுக்காக இவ்வாரம் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என கூறப்பட்டது.

தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் மக்களவை கூட்டத் தொடர் வரும் 5ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள சூழலில் 5ஆம் தேதிக்குள் நாடாளுமன்றம் கலைக்கப்படும் ஆருடங்கள் வலுபெற்றன.

இந்நிலையில் இன்றுக் காலை முதலே நாடாளுமன்றம் நாளை 2ஆம் தேதி கலைக்கப்படலாம் எனவும் வேட்பாளர் பட்டியல் 4ஆம் தேதி அறிவிக்கப்படலாம் எனவும் தகவல் ஒன்று 'தீயாய்' பரவிக் கொண்டிருக்கிறது.

ஏப்ரல் 1ஆம் தேதி 'முட்டாள்கள் தினம்' என்பதால் பொதுத் தேர்தலை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்களை 'முட்டாளாக்க' இவ்வாறு தகவல் பரப்பப்பட்டதா? அல்லது நாளை நாடாளுமன்றம் கலைக்கப்படுவது உண்மையா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

No comments:

Post a Comment