Tuesday 3 April 2018

ஜேபிஜே சம்மன் - 70% கட்டணச் சலுகை


 பத்து பகாட்-
பல்வேறு சாலை குற்றங்களுக்காக சம்மன்களை பெற்றவர்கள் தங்களின் அபராதத் தொகையை ஏப்ரல் மாதம் முழுவதும் 70 விழுக்காடு சலுகை அடிப்படையில் செலுத்தலாம் என ஜேபிஜே அறிவித்துள்ளது.

இன்று முதல் தொடங்கும் இந்த சலுகை கட்டணத்தை ஜேபிஜே முகப்பிடங்களில் செலுத்தலாம். ஆயினும் இந்த சலுகையில் 'அவாஸ்' எனப்படும் தானியங்கி சாலை பாதுகாப்பு கண்காணிப்பு முறை மூலம் அபராதம் விதிக்கப்பட்டவர்களுக்கு சலுகை வழங்கப்படாது என சாலை போக்குவரத்து துணை துணையமைச்சர் டத்தோ அப்துல் அஸிஸ் கப்ராவி தெரிவித்தார்.

ஜேபிஜேவின் 72ஆம் ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு பத்து பகாட்டிலுள்ள பேரங்காடியில் நடத்த கொண்டாட்ட நிகழ்ச்சியில் அவர் இவ்வாறு கூறினார்.

ஜேபிஜே தலைமை இயக்குனர் டத்தோ சஹாருடினுடன் கலந்தாலோசித்த பின்னர் இந்த 70 விழுக்காடு அபராத கட்டணச் சலுகையை அறிவிப்பதாக அவர் மேலும் சொன்னார்.

No comments:

Post a Comment