Wednesday 18 April 2018
கேமரன் மலை சர்ச்சை; தேமுவுடனான கூட்டணி நீடிக்கும்- டான்ஶ்ரீ கேவியஸ்
ரா.தங்கமணி
கோலாலம்பூர்-
கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவது சர்ச்சையாக வெடித்திருக்கும் சூழலில் தேசிய முன்னணியுடனான கூட்டணியை மைபிபிபி கட்சி நீடிக்கும் என அக்கட்சியின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எம்.கேவியஸ் இன்று அதிரடியாக அறிவித்தார்.
கேரமன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கையிலிருந்து பின்வாங்க போவதில்லை. ஆயினும் பிரதமரின் முடிவுக்காக இன்னமும் தாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம்.
கட்சியின் மேல்மட்ட தலைவர்களுடன் கலந்தாலோசித்த பின்னர் தேமுவுடான கூட்டணியை தொடர்வது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப இத்தேர்தலில் தேமுவின் வெற்றிக்காக மைபிபிபி பாடுபடும்.
கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் கடந்த 4 ஆண்டுகளாக கடுமையான உழைப்பை வழங்கிய போதிலும் அத்தொகுதியில் யார் போட்டியிடுவது என்பதை பிரதமரும் தேசிய முன்னணி தலைவருமான டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக்கின் முடிவுக்கே விட்டு விடுவதாக இன்று மைபிபிபி தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் அவர் இவ்வாறு சொன்னார்.
கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு மைபிபிபிக்கு வழங்கப்படாத சூழலில் டான்ஶ்ரீ கேவியஸ் சுயேட்சை வேட்பாளராக அங்கு போட்டியிடக்கூடும் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment