Saturday 21 April 2018
புந்தோங்கில் மஇகாவே போட்டியிடும்- டான்ஶ்ரீ ராஜு
புனிதா சுகுமாறன்
ஈப்போ-
எதிவரும் 14வது பொது தேர்தலில் புந்தோங் சட்டமன்றத் தொகுதி மஇகாவுக்கு வழங்கப்பட்டுவிட்டது. அங்கு மஇகாவை பிரதிநிதித்து
பேரா மஇகாவின் முன்னாள் செயலாளர் எஸ்.ஜெயகோபி வேட்பாளராக களமிறங்குகிறார் என நேற்று நடைபெற்ற வெண்ணிலா ஆர்ட்ஸ்சின் நெஞ்சம் மறப்பதில்லை நிகழ்வில் சிறப்புரை ஆற்றுகையில் ஈப்போ பாராட் மஇகா தொகுதியின் தலைவர் டான்ஶ்ரீ கோ.இராஜு தெரிவித்தார்.
மலேசியாவின் சட்டமன்றத் தொகுதிகளில் அதிகமான இந்தியர்கள் வாழ்கின்ற புந்தோங் தொகுதியில் களமிறங்கும் ஜெயகோபியை வெற்றி பெறச் செய்வது அவசியமானதாகும்.
13ஆயிரம் இந்திய வாக்காளர்கள் உள்ள இத்தொகுதியில் இந்திய பிரதிநிதி ஜெயிக்க முடியாது என்ற வாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என டான்ஶ்ரீ ராஜு கூறினார்.
இந்த நிகழ்வில் புந்தோங் தொகுதியில் தேமு வேட்பாளராக களமிறங்கும் ஜெயகோபியை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment