Tuesday 10 April 2018

ஆட்சியை கைப்பற்றவே 'ஒரே சின்னம்'- சிவகுமார் (வீடியோ இணைப்பு)



ரா.தங்கமணி

ஈப்போ-
ஒரே சின்னத்தின் கீழ்  நம்பிக்கை கூட்டணி போட்டியிட முனைந்துள்ளது ஓர் ஆக்ககரமான திட்டம்  என்பதோடு புத்ராஜெயாவை கைப்பற்றும் லட்சியத்தை நிறைவேற்றும் தடமாகவும் அமைந்துள்ளது என பேராக் மாநில நம்பிக்கைக் கூட்டணி செயலாளர் வீ.சிவகுமார் கூறினார்.

வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள பிகேஆர், ஜசெக, பெர்சத்து, அமானா ஆகிய நான்கு கட்சிகளும் ஒருசேர பிகேஆர் கட்சியின் சின்னத்தில் போட்டியிடவுள்ளது.

வீடியோ இணைப்புக்கு இங்கே சொடுக்கவும்;
https://www.facebook.com/BhaarathamOnlineNews/videos/296728760860967/?t=2

இது உலக அளவிலான மாற்றத்தை முன்னெடுக்கும் திட்டமாகும். பல கட்சிகளாக பிரிந்து ஆளும் கட்சியை எதிர்ப்பதை விட ஒரு கூட்டணியின் கீழ் போட்டியிட்டு வெற்றி பெறுவதை இலக்காகக் கொண்டு இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஜசெகவின் 'ராக்கெட்' சின்னம் வரும் தேர்தலில் பயன்படுத்தப்படாது என்பது ஜசெகவின் தீவிர உனர்வாளர்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆயினும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் எனும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட திட்டமாகவே ஒரே சின்னத்தின் போட்டியிட நம்பிக்கைக் கூட்டணி முனைந்துள்ளது.

ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்பதே நமது இலக்கு. அதனை அடைவதற்கு சில முன்னேற்பாடான திட்டங்களில் இதுவும் ஒன்றாகும் என பேராக் ஜசெகவின் துணைத் தலைவருமான சிவகுமார் கூறினார்.

No comments:

Post a Comment