Friday 20 April 2018

வேட்பாளரை விட தேமு வெற்றியே முக்கியம்- மணிமாறன் வலியுறுத்து


ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
வேட்பாளர் யார் என்ற விவாதத்தை இன்னமும் முன்வைத்துக் கொண்டிருப்பதை விட தேசிய முன்னணியின் வெற்றிக்கு பாடுபடுவதே மிக முக்கியமானது என சுங்கை சிப்புட் மஇகா செயலாளர் கி.மணிமாறன் வலியுறுத்தினார்.

நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலுக்கு இன்னமும் சில தினங்களே உள்ள சூழலில் வேட்பாளர் விவகாரத்தையே பேசி கொண்டிருப்பதை விட தேமுவை வெற்றி பெறச் செய்வதே இப்போது மிக முக்கியமானதாகும்.

அவ்வகையில் சுங்கை சிப்புட் தொகுதியின் வேட்பாளராக தற்போது களமிறக்கப்பட்டுள்ள திருமதி தி.தங்கராணியின் வெற்றிக்கு அனைவரும் ஒன்றிணைந்து களப்பணி ஆற்ற வேண்டும்.

வேட்பாளர் விவகாரத்தில் உள்ளூர் மஇகாவினர் ஆவேசப்பட்டாலும் கட்சி தலைமைத்துவம் எடுக்கும் முடிவுக்கு  அனைவரும் கட்டுப்பட்டு நடக்க வேண்டியது மிக அவசியமாகும்.

இங்கு வேட்பாளர் வெற்றியை விட தேசிய முன்னணியின் வெற்றி உறுதி செய்யப்படுவதே மிக முக்கியமானதாகும் என்ற அடிப்படையில் அனைவரும் தேமு வெற்றிக்கு பாடுபட வேண்டும் என மணிமாறன் கேட்டுக் கொண்டார்.

No comments:

Post a Comment