Saturday 14 April 2018

இந்திய தூதருடன் பேராக் இந்திய வர்த்தக சபையின் நல்லெண்ண சந்திப்பு


ரா.தங்கமணி

ஈப்போ-
மலேசியாவுக்கான இந்திய தூதராக புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள ஶ்ரீ மிருதுல் குமார் அண்மையில் பேராக் இந்திய வர்த்தக சபைக்கு ( பிஐசிசி)  நல்லெண்ண வருகை மேற்கொண்டிருந்தார்.

பேராக் இந்திய வர்த்தக சபையின் அழைப்பை ஏற்று வந்திருந்த அவர், இங்குள்ள வர்த்தகர்களிடையே கலந்துரையாடினார்.

இந்நாட்டிலுள்ள இந்தியர்களின் நலனுக்காக இந்திய தூதரகம் மூலம் பல வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என கூறிய ஶ்ரீ மிருதுல் குமார், இந்திய வர்த்தகர்களின் நலனுக்காக பேராக் இந்திய வர்த்தக சபை மேற்கொள்ளும் திட்டங்களுக்கு உறுதுணையாக இருப்பேன் என கூறினார்.

இதனிடையே, இந்திய தூதரகத்துடன் அணுக்கமான உறவை கொண்டுள்ள பேராக் இந்திய வர்த்தக சபை, இருவழி வர்த்தக உறவை பேணி காக்கும் வகையில் சில ஆக்ககரமான திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.

அதன் அடிப்படையில் இந்திய தூதருடனான நல்லெண்ண சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. முன்னாள் இந்திய தூதர் டி.எஸ்.திருமூர்த்தியுடனான நல்லதொரு உறவு தற்போதையை தூதரிடம் நிலைபெறும் வேண்டும்.

இங்குள்ள வர்த்தகர்கள் இந்திய நாட்டின் வர்த்தகத்தை விரிவாக்கவும் அங்குள்ள தொழில்துறைகளை இங்கு அறிமுகம் செய்யவும் இந்த நல்லுறவு வழிவகை காணப்படும் என பேராக் இந்திய வர்த்தக சபையின் தலைவர் ஹாஜி சுல்தால் கூறினார்.

இந்நிகழ்வை சபையின் செயலாளர் அசோக் சிறப்பாக வழிநடத்தினார்.

இதில் டான்ஶ்ரீ எஸ்.வீரசிங்கம், சபையின் முன்னாள் தலைவர் எம்.கேசவன் உட்பட சபை உறுப்பினர்களும் பிரமுகர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment