Thursday 12 April 2018
GE14: ஏப்.25க்கு பிறகே வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவர் - பக்காத்தான் ஹராப்பான்
பெர்மாத்தாங் பாவ்-
ஏப்ரல் 25ஆம் தேதி நடைபெறும் நம்பிக்கைக் கூட்டணியின் (பக்காத்தான் ஹராப்பான்) மத்திய குழு கூட்டத்திற்குப் பின்னரே 14ஆவடு பொதுத் தேர்லில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவர் என அதன் தலைவர் டத்தோஶ்ரீ வான் அஸிஸா தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் போட்டியிடவுள்ள அனைத்து வேட்பாளர்களும் பங்கேற்பர். போட்டியிடவுள்ள அனைத்து வேட்பாளருக்கு நான் கையெழுத்திடுவதால் 25இல் நடைபெறும் கூட்டத்தில் அவர்களுக்கான சில விளக்கங்கள் அளிக்கப்படும் என அவர் சொன்னார்.
நானும் பக்காத்தான் ஹராப்பான் அவைத் தலைவருமான துன் டாக்டர் மகாதீர் முகமட்டும் போட்டியிடவுள்ள வேட்பாளர்களுக்கு இறுதி ஆலோசனைகளை வழங்கவுள்ளோம்.
போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்பதை ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். 25ஆம் தேதி வரை பொறுத்திருங்கள் என டத்தோஶ்ரீ வான் அஸிஸா கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment