Sunday 8 April 2018
அரசு பதிவேட்டில் உள்ள நிலத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்காதது ஏன்? சிவசுப்பிரமணியம் கேள்வி -(வீடியோ இணைப்பு)
ரா.தங்கமணி, புனிதா சுகுமாறன்
ஈப்போ-
ஈப்போ கல்லுமலை ஶ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தை அரசு பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளதை விட அந்த நிலத்தை நில அலுவகத்தில் முறையாக பதிவு செய்யும் நடவடிக்கையை ஈப்போ இந்து தேவஸ்தானம் மேற்கொள்ள வேண்டும் எ ன புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஆதி.சிவசுப்பிரமணியம் வலியுறுத்தினார்.
130 ஆண்டுகால வரலாற்றைக் கொண்டுள்ள இவ்வாலயம் அமைந்துள்ள தற்போதைய நிலம் அரசாங்க பதிவேட்டில் இடம்பெற்றிருந்தாலும் நிலம் ஆலயத்திற்கு உரியது என்பதை உறுதிபடுத்தக்கூடிய நில அலுவலக தாஸ்தாவேஜுகளை பெறுவதற்கான நடவடிக்கையை ஆலய நிர்வாகம் மேற்கொண்டதா? என்பதே எனது கேள்வியாகும்.
நில அலுவலகம், நில அளவு அலுவலகம், நில ஆய்வு பிரிவு உட்பட 16 இலாகாக்களுக்கு ஆலயத்தின் வரைப்படம் உட்பட பல ஆவணங்களை ஆலய நிர்வாகம் சமர்பித்துள்ளதா?
புந்தோங் 5இல் உள்ள ஶ்ரீ கிருஷ்ண பகவான் ஆலயத்தை 2011இல் அரசு பதிவேட்டில் இடம்பெறச் செய்த போதிலும் இந்நிலத்தை உறுதிப்படுத்த 16 வரைப்பட ஆவணங்களை சமர்பிக்க சொல்லி நில அலுவலகம் கோரியிருந்தது.
நில அலுவலகம் அங்கீகரிக்காத வரை அந்நிலம் வெற்று நிலமாகவே கருதப்படும் வேளையில் நிலத்தை உறுதி செய்வதற்கு ஆலய நிர்வாகம் ஆக்ககரமான நடவடிக்கை எடுக்காதது ஏன்?
மாநில அரசில் பட்ஜெட்டில் ஆண்டுக்கு 3.5 மில்லியன் வெள்ளி இஸ்லாம் அல்லாத சமய விவகாரப் பிரிவுக்கு ஒதுக்கப்படுகின்ற சூழலில் அந்த மானியத்தை பயன்படுத்தி நிலத்தை ஆலயத்திற்கு உறுதி செய்யும் நடவடிக்கை ஆலய நிர்வாகம் மேற்கொண்டிருக்கலாமே? என இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் சிவசுப்பிரமணியம் தெளிவுபடுத்தினார்.
வீடியோ இணைப்புக்கு இந்த லிங்க்-ஐ சொடுக்கவும்:
https://www.facebook.com/BhaarathamOnlineNews/videos/295901550943688/?t=17
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment