கோலாலம்பூர்-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு பள்ளி நாட்களிலும் வருமேயானால் சிறப்பு விடுமுறை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தயாராக உள்ளது.
14ஆவது பொதுத் தேர்தலின்போது நாடு தழுவிய நிலையில் 10,200 பள்ளிகள் வாக்களிப்பு மையங்களாக செயல்படவுள்ளன என தெரிவித்த கல்வி அமைச்சர் டத்தோஶ்ரீ மாட்ஸிர் காலிட், இது குறித்து விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றார்.
பொது விடுமுறை நாட்களில் வாக்களிப்பு வந்தால் பிரச்சினை இல்லை. ஆனால் வேலை நாட்களில் வாக்களிப்பு நடந்தால் அனைத்துப் பள்ளிகள் அல்லது குறிப்பிட்ட பள்ளிகள் மூடபடுவதற்கான நடவடிக்கை குறித்து பேச வேண்டியுள்ளது என்றார் அவர்.
No comments:
Post a Comment