Wednesday 4 April 2018

போட்டியிடும் தொகுதிகள் எது என்பதை அறியாமல் தள்ளாடும் மஇகா; இந்தியர்கள் ஆதரவளிக்க வேண்டுமா? சிவநேசன்


ரா.தங்கமணி

ஈப்போ-
வரும் 14ஆவது பொதுத் தேர்தலில்  தாம் போட்டியிடும் தொகுதிகள் எது? என்பதை அறியாமல்  மஇகா தள்ளாடிக் கொண்டிருக்கிறது என சுங்காய் சட்டமன்ற உறுப்பினர் அ.சிவநேசன் தெரிவித்தார்.

தேசிய முன்னணியில் மூன்றாவது பெரிய கட்சியான மஇகா, இன்று போட்டியிடும் தொகுதிகளுக்காக தள்ளாடி கொண்டிருக்கிறது. கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் மட்டுமே தாம் போட்டியிடும் சிகாமட் நாடாளுமன்றத் தொகுதியை உறுதிபடுத்தியுள்ளார்.
ஆனால் பிற தொகுதிகள் குறித்து இன்றளவும் எவ்வித உறுதியான நிலைபாட்டையும் மஇகா கொண்டிருக்கவில்லை.

பேராக் மாநிலத்தை பொறுத்தவரை மஇகா போட்டியிடும் சட்டமன்றத் தொகுதிகள் நிலை கேள்விக்குறியாகவே உள்ளது. சுங்காய் சட்டமன்றத் தொகுதியில்  மஇகா போட்டியிடக்கூடும் என எதிர்பார்க்கப்படும் சூழலில் தற்போது மசீச தான் அங்கு போட்டியிடும் என தெரியவருகிறது.

1974ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரை  மஇகாதான் அங்கு போட்டியிட்டது. ஆனால் 2013இல் சுங்காய் சட்டமன்றத் தொகுதியை மசீசவிடம் விட்டுக் கொடுத்து ஜெலாப்பாங் தொகுதியில் போட்டியிட்டது.

சுங்காய் தொகுதியை விட ஜெலாப்பாங்கில் இந்தியர்கள் வாக்குகள் கூடுதலாகும். ஆனால் அங்கு சுங்காயை விட 15 விழுக்காடு சீனர்களின் வாக்குகள் அதிகமாகும். அங்கு மஇகா போட்டியிட்டு தோல்வி கண்டது.

தற்போது தஞ்சோங் மாலிம் நாடாளுமன்றத் தொகுதியில் மசீசவும் அதற்குட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளான சிலிம், பெராங் ஆகியவற்றில் அம்னோவும் சுங்காயில் மசீசவும் போட்டியிடுகின்றன.

ஆனால் பக்காத்தான் ஹராப்பானின் தஞ்சோங் மாலிம் நாடாளுமன்றத் தொகுதியில் பிகேஆர் சார்பில் சீனர் ஒருவர் வேட்பாளராக களமிறக்கப்படவுள்ள நிலையில் சுங்காயில் ஜசெக சார்பில் இந்தியரும் பெராங்கில் பெர்சத்து, சிலிமில் அமானா சார்பில் மலாய்க்காரர்களும் வேட்பாளராக களமிறக்கப்படவுள்ளனர்.

அனைத்து இன மக்களின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கி பக்காத்தான் கூட்டணி வேட்பாளரை களமிறக்குகின்ற நிலையில் தேசிய முன்னணி  மட்டும் அனைத்து இன மக்களுக்கும் முன்னுரிமை அளிக்காதது ஏன்?

தாங்கள் போட்டியிடும் சட்டமன்றத் தொகுதிகளில் என்னவென்பதை இன்னமும் முடிவு செய்யாமல் தள்ளாடும் நிலையில் மஇகா உள்ளதை உணர்ந்து இந்தியர்கள் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியை தேர்வு செய்ய வாய்ப்பளிக்க வேண்டும் என சிவநேசன் மேலும் கூறினார்.

No comments:

Post a Comment