Thursday 12 April 2018

தவறான புரிந்துணர்வால் குப்பைகளை அகற்றுவதில் காலதாமதம் - ஆலயத் தலைவர் செபஸ்டியன்



புனிதா சுகுமாறன்

ஈப்போ-
புந்தோங், ஶ்ரீ மகா காளியம்மன் ஆலய வருடாந்திர திருவிழா அண்மையில் நடைபெற்று  முடிந்த நிலையில் ஆலயம் அமைந்துள்ள சாலை நெடுக குப்பை கூளங்களால் சிதறி கிடந்தது சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனத்திற்கு ஆளானது.

ஆலய திருவிழா முடிந்து 3 நாட்களுக்கு மேலாகியும்  குப்பை கூளங்களை ஈப்போ மாநகர் மன்றம்  சுத்தம் செய்யாதது குறித்து கருத்துரைத்த ஆலயத் தலைவர் செபஸ்டியன்,  ஒரு தவறான புரிந்துணர்தலே தாமதத்திற்கு காரணமாகும் என கூறினார்.

எப்போதும் ஆலயத் திருவிழா முடிந்தவுடனே குப்பைக் கூளங்கள் சுத்தம் செய்யப்படும் நிலையில் தற்போது காலதாமதம் ஏற்பட்டது பொதுமக்கள் மத்தியில் சஞ்சலத்தை ஏற்படுத்தியுள்ளது.

குப்பைகளை கொட்டுவதற்கு ஏதுவாக  குப்பை தொட்டிகள் தயார்படுத்தப்படாததே சாலையில் குப்பைக்கூளங்கள் அதிகமாக சிதறி கிடந்ததற்கு காரணமாகும் என செபஸ்தியன் குறிப்பிட்டார்.

இன்று காலை ஈப்போ மாநகர் மன்றத்தினருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின்ம் வழி குப்பைகளை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. மாநகர் மன்ற ஊழியர்கள் குப்பைகளை அகற்றி அச்சாலையை தூய்மைபடுத்தினர் என்றார் அவர்.



No comments:

Post a Comment