பத்துபகாட்-
தேசிய முன்னணி வெளியிட்டுள்ள தேர்தல் கொள்கை அறிக்கை உயர்தரம் வாய்ந்தது என பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்தார்.
கடந்த 7ஆம் தேதி அறிவிக்கப்பட்ட தேமுவின் தேர்தல் கொள்கை அறிக்கையை ஆய்வு செய்த அனைத்துலக நிறுவனங்கள், கொள்கை அறிக்கையின் உள்ளடங்கள் மலேசியாவின் பொருளாதார மேம்பாட்டுக்கு வழிவகுக்கும் என தெரிவித்துள்ளன.
தேர்தல் கொள்கை அறிக்கையை ஆய்வு செய்துள்ள உலக வங்கி, இதன் வழி மலேசியாவின் பொருளாதாரம் 5.4 விழுக்காட்டிலிருந்து 5.6 விழுக்காடாக உயர்வு காணும் என கூறியுள்ளது.
இதன்வழி தேமுவின் கொள்கை அறிக்கை உயர்தரம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. எதிர்க்கட்சியினர் தேர்தல் கொள்கை அறிக்கைகள் தரம் வாய்ந்ததாக கருதப்படாததால் அந்த நிறுவனங்கள் அதனை ஆய்வு செய்யவில்லை.
இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் டோல் கட்டணம், ஜிஎஸ்டி, பிடிபிடிஎன் கடனுதவி போன்றவை முற்றாக அகற்றப்படும் என்ற எதிர்க்கட்சியினரின் வாக்குறுதியால் நாட்டின் கடன் 430 பில்லியனாக அதிகரிக்கப்படும் என அவர் சொன்னார்.
இத்தகைய சூழல் நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு வழிவகுத்து விடும் என டத்தோஶ்ரீ நஜிப் கூறினார்.
No comments:
Post a Comment