Tuesday, 7 November 2017

டிரம்புக்கு வடகொரியா எச்சரிக்கை



சியோல்-
வடகொரியாவின் அணு ஆயுத திட்டங்களுக்கு எதிராக ஆசிய நாடுகளை ஒன்று திரட்டும் நோக்கத்துடன் டிரம்ப் அங்கு சுற்றுப்பயணம் தொடங்கி உள்ளார்.

முதல் கட்டமாக ஜப்பான் சென்றுள்ள அவர் சென்ற உடனேயே வடகொரியாவை மறைமுகமாக சாடினார். அப்போது அவர், “எந்த சர்வாதிகாரியும், அமெரிக்காவை குறைத்து மதிப்பிட்டு விட முடியாது” என சாடினார்.


டிரம்ப்  நாளை தென்கொரியா செல்லும் நிலையில், ஜப்பானில் இப்படி கருத்து வெளியிட்டிருப்பதற்கு வட கொரியா பதிலடி கொடுத்துள்ளது.
மேலும், “டிரம்பின் கடுமையான கருத்துக்கள், அமெரிக்காவின் நிலப்பகுதிக்கு அணுசக்தி பேரழிவை கொண்டு வரக்கூடும்” என்றும் கூறப்பட்டுள்ளது.

வட கொரியாவின் அணு ஆயுத திட்டங்களை முடிவுக்கு கொண்டு வந்தே ஆக வேண்டும் என்பதில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உறுதியாக உள்ளார். இது தொடர்பாக அவருக்கும், வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன்னுக்கும் இடையே தொடர் வார்த்தை யுத்தம் நடந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a comment