Saturday 4 November 2017

3 கான்வெண்ட் பள்ளிகள் மூடப்படுவதை மாநில அரசு அனுமதிக்காது- முதல்வர் லிம்

ஜோர்ஜ்டவுன் -
மூன்று கான்வெண்ட் பள்ளிகள் மூடப்படுவதற்கு ஜசெக தலைமையிலான பினாங்கு மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. லைட் ஸ்திரீட் கான்வெண்ட் தேசியப் பள்ளி, லைட் ஸ்திரீட் கான்வெண்ட் இடைநிலைப்பள்ளி, புலாவ் திக்குஸ் கான்வெண்ட் இடைநிலைப்பள்ளி ஆகிய மூன்றும் மூடப்படுவதற்கு சம்மதிக்க மாட்டோம் என மாநில முதல்வர் லிம் குவான் எங் தெரிவித்தார்.

இந்த பள்ளிகள் தென்கிழக்காசியாவில் மிகவும் பழமை வாய்ந்தவையாகும்.  'இந்த பள்ளிகள் மூடப்படுவது குறித்த தகவலை நாங்கள் பெறவில்லை'.
இந்த பள்ளிகள் அமைந்துள்ள நிலம் மேம்பாட்டுத் திட்டங்களுக்காக விற்கப்படுவதாக கூறப்படும் வேளையில் அங்கு எத்தகைய மேம்பாட்டுத் திட்டங்களுக்கும் பினாங்கு மாநில அரசாங்கம் ஒப்புதல் அளிக்கவில்லை என செய்தியாளர்கள் சந்திப்பில் லிம் குறிப்பிட்டார்.

சம்பந்தப்பட்ட மூன்று பள்ளிகளும் மூடப்படுவதால் 2018க்கான மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்படாது என வெளிவந்த தகவலை அடுத்து கருத்துரைக்கையில் அவர் இவ்வாறு சொன்னார்.

No comments:

Post a Comment