சுகுணா முனியாண்டி
பினாங்கு-
கடந்த 20 ஆண்டுகளுக்குப் பிறகு பினாங்கைப் புரட்டி ப் போட்டிருக்கும் கனத்த மழையும் வெள்ளமும் இம்மாநில மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாகிய நிலையில் பிரிட்டன் இளவரசர் சார்ல்ஸ்- டச்சஸ் பினாங்கிற்கு அதிகாரபூர்வ வருகை மேற்கொண்டுள்ளனர் .
காலை 8.00 மணியளவில், ராயல் ஏர் ஃபோர்ஸ் விமானம் மூலம் இளவரசர் சார்ல்ஸ், கார்ன்வாலின் டச்சஸ் பாயன் லேபாஸில் பினாங்கு
அனைத்துலக விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர் .
ராயல் தம்பதியினரை முதலமைச்சர் லிம் குவான் எங், அவரது மனைவி பெத்தி கூவ் ஆகியோர் அன்பாக வரவேற்றனர்.
மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள், சபாநாயகர் டத்தோ லாவ் சு கியாங், மாநிலச் செயலாளர் டத்தோ ப்ராசான் டாரஸ், பினாங்கு மேயர் டத்தோ மைமுனா மொஹமது ஷெரீப், பிரிட்டன் தூதரகத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் உடனிருந்தனர்.
மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ள நிலவரங்களை கேட்டு அறிந்தார் இளவரசர் சார்ல்ஸ், டச்சஸ் ஆஃப் கார்ன்வால் ஆகியோர் இந்தியாவுக்கு புறப்படுவதற்கு முன் 2 நாள் பயணமாக பினாங்கிற்கு வந்துள்ளதாகவும் . மலேசியாவிற்கும் பிரிட்டனுக்கும் இடையே 60 ஆண்டுகால இருதரப்பு உறவுகளை நினைவுகூறும் வகையில் மலேசியாவுக்கு வருகை புரிந்துள்ளதாகவும் அவர் இச்சந்திப்பின்போது விவரித்தார் .
No comments:
Post a Comment