ஜோர்ஜ்டவுன்-
ஒழுங்கு நெறிமுறைகளை
கொண்டுள்ள பினாங்கு அரசு ஊழியர்களுக்கு மாநில அரசு வெ.2,000 போனஸ் வழங்கவுள்ளதாக மாநில
முதலமைச்சர் லிம் குவான் எங் இன்று அறிவித்தார்.
இம்மாநிலத்தில்
பணிபுரியும் மொத்த 8,000 அரசு ஊழியர்களுக்கான இந்த போனஸ் ஆண்டு இறுதியில் வழங்கப்படும்
என்று 2018ஆம் ஆண்டிற்கான மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது அவர் தெரிவித்தார்.
கட்டொழுங்கு
பிரச்சினை உள்ள அரசு ஊழியர்களுக்கு வெறும் 1,000 வெள்ளி மட்டுமே வழங்கப்படும். மாநில
அரசு ஏஜென்சிகளான பினாங்கு மாநகர் மன்றம்,, செபெராங் பிறை மாநகர் மன்ற ஊழியர்களும்
இதில் அடங்குவர்.
அதோடு, சமயப்
பள்ளி, காஃபா, அல்-குரான் வகுப்பாசிரியர்களுக்கும் தனியார் சீனப்பள்ளி ஆசிரியர்களுக்கும்
தலா 300 வெள்ளியும் தாஃபீஸ் சமயப்பள்ளி, இஸ்லாமிய பாலர்பள்ளி, “பொண்டோக்” பள்ளி ஆசிரியர்களுக்கு
தலா 200 வெள்ளியும் வழங்கப்படும் என லிம் குவான்
எங் கூறினார்.
No comments:
Post a Comment