Monday 6 November 2017

பினாங்கில் கடுமையான வெள்ளம்- லட்சக்கணக்கான மக்கள் அவதி

சுகுணா முனியாண்டி
செபெராங் பிறை-
செபெராங் பிறை தொடங்கி பினாங்கு தீவு மழுவதும் ஆங்காங்கே கடுமையான வெள்ளம் ஏற்பட்டதோடு புயல் காற்றும் வீசியதால் பினாங்கு மாநிலத்திலுள்ள லட்சக்கனகாண மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர் .

இதனிடையே பத்துகவான் பகுதியில் கடுமையான காற்று வீசியதால் 40 வீடுகள் சேதம் அடைந்துள்ளன .

நேற்று காலை தொடங்கி மழை விட்டு விட்டு வந்த நிலையில் மதியத்திற்கு பிறகு கடுமையான மழை ஏற்பட்டது ,தொடர்ந்து விடியற்காலை கடுமையான காற்று வீசியதால் பொது மக்களின் வீட்டின்  கூரைகள் காற்றில் பறந்தும் சாலையோரமாய் இருந்த  பெரிய  மரங்கள் விழுந்தும் மின்சார தூண்கள் சாய்ந்தும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தின.

செபெராங் பிறை, பத்து கவான் வட்டாரத்திலுள்ள தாமான் பகுதிகள் உட்பட கம்போங் பகுதிகள் என 40 வீடுகள் பதிக்கப்பட்டுள்ளன.  இதுவரையில் பாதிக்கப்பட்ட மக்கள்  வெள்ளப் பேரிடர் நிவாரண மையங்களில் சேர்க்கப்பட்டுள்ளனர் என பத்துகவான் கிராம மேம்பாட்டுத் தலைவர் கோ.மணி தெரிவித்தார் .இப்பகுதியில் கண்காணிப்புப் பணிகளும் மேற்கொண்டு வருவதாக கூறிய அவர், பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வரையில் வட்டார ஜெகேகே தம் பணியை செம்மையாக செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்

இவ்வட்டார மக்களை நேரில் காண புக்கிட் தம்பூன் சட்டமன்ற உறுப்பினர் லவ் சு கியாங் உட்பட சமூகநல இலாகா அதிகாரிகள் நேரில் சென்று மக்களின் பதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்ட டத்தோ லவ் சு கியாங், மக்களுக்கும் தேவையான உதவிகள் செய்து தரப்படும் எனவும் தெரிவித்துள்ளார் .
பினாங்கு முழுவதும் கடுமையான வெள்ளப் பெருக்கம், கடுமையான புயல் காற்றால் மத்திய செபெராங் பிறை ,புக்கிட் தெங்கா, பிறை ,செபெராங் ஜெயா, சை லெங் பார்க் ,மாக் மண்டின் பட்டவொர்த், இன்னும் பல இடங்கள் உட்பட பினாங்கு தீவில் ஜாலான் துன் காடோன் ,ஜாலான் மஸ்ஜீட் நெகிரி ,கப்போங் முத்தியார ,ஜாலான் பி.ரம்லி உட்பட  இன்னும் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மக்கள் பதுகாப்பிற்காக சாலை  போக்குவரத்து ஆங்காங்கே மூடப்பட்டுள்ளது.பினாங்கு நஃபேரி போக்குவரத்து சேவை உட்பட  சாலைகள் போக்குவரத்தும் நிலைகுலைந்து போனது என்பது குறிப்பிடதக்கது.

No comments:

Post a Comment